ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 9 am - இன்றைய 10 முக்கிய செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 13, 2021, 9:09 AM IST

1. மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 5ஆயிரம் கன அடியாக குறைத்து வெளியேற்றப்படுகிறது.

2. ‘தொடர் விடுப்பு கேட்டு முதலமைச்சருக்கு நளினி மனு' - வழக்கறிஞர் புகழேந்தி தகவல்

தன்னையும், கணவர் முருகனையும் தொடர் விடுப்பில் விடுவிக்கக்கோரி முதலமைச்சருக்கு நளினி மனு அனுப்பியது தொடர்பாக, இந்த வாரம் நாளினியின் தாயார் முதலமைச்சரை சந்திக்கவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

3. பாமக ராமதாஸ் குறித்து முகநூலில் அவதூறு

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முகநூலில் அவதூறு பரப்பி வரும் நபரைக் கைது செய்ய வலியுறுத்தி மேட்டூர் பாமகவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4. நரிக்குறவர்களுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

சைதாப்பேட்டையிலுள்ள கோட்டூர் ஜிப்ஸி காலனியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமினை அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

5. 'கொங்கு நாடு மாநிலம் ஆக்கப்பட வேண்டும்' - பாஜக தீர்மானம்

மேற்கு மண்டலத்தை கொங்குநாடு என்ற புதிய மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

6. 'மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுத்தே தீருவோம்' - துரைமுருகன் பதிலடி

'மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம்' எனத் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கர்நாடக உள் துறை அமைச்சர் பசவராஜா பொம்மைய்யாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

7. முதல் விண்வெளிப் பயணம் சென்ற ரிச்சர்ட் பிரான்சன் தமிழ் வம்சாவளியா?

வாஷிங்டன்: அமெரிக்காவில் யூனிட்டி 22 விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்ற ரிச்சர்ட் பிரான்சன் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.

8. 'நீட் வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு'

நீட் தேர்விற்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராவதில் தவறு இல்லை என்றும், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

9. கள்ளிக்காட்டு நாயகனுக்கு 68ஆவது அகவை தினம்

கவிஞர் வைரமுத்து இன்று (ஜூலை 13) தனது 68ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

10. அசுரன் தெலுங்கு ரீமேக் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாரப்பா' நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.