ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 7AM - இன்றைய செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 8, 2021, 7:12 AM IST

1. எல்.முருகன் மத்திய அமைச்சரா - கமல் வருத்தம்

தமிழ்நாட்டிற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியடைய முடியவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

2. எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை: செல்போன் செயலி உதவியது - கும்பல் தலைவன் வாக்குமூலம்

ஏடிஎம்மில் பணத்தின் இருப்பை அறிந்துகொள்ள தனியாக ஒரு செல்போன் செயலியை பயன்படுத்தி, அதன்மூலம் எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளையடித்தாக காவல்துறையினர் விசாரணையில் கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

3. தாம்பூலத் தட்டோடு மாணவர்களையும் பெற்றோரையும் வரவேற்கும் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள்!

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், வீடுவீடாகச் சென்று தாம்பூலத் தட்டில் பழங்கள், வெற்றிலை, பாக்குகள் வைத்து, துண்டுப்பிரசுரங்கள் வழங்கி மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

4. தலைவர் பதவியை குறிவைக்கும் நயினார் நாகேந்திரன்; அணை போடும் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல். முருகன் இணையமைச்சராகிவிட்ட நிலையில், அந்தப் பதவிக்கு நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

5. தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்!

ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனுக்கு என்னென்ன துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

6. ஏழு பேர் விடுதலையில் திமுக மௌனம் காப்பது ஏன்? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

ஆட்சிக்கு வந்தால் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்வதாக கூறிவிட்டு, தற்போது திமுக மௌனம் சாதிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

7. பாஜகவுடன் கூட்டணி தொடரும்: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை

பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று ஓ. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

8. 43 புதிய ஒன்றிய அமைச்சர்கள் யார்; அவர்களின் சுயவிவரங்கள் என்ன?

பிரதமர் மோடி 2ஆவது முறையாக பதவி ஏற்றதற்கு பின், ஒன்றிய அமைச்சரவையில் இதுவரை எந்த ஒரு பெரிய மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், 43 பேரை ஒன்றிய அமைச்சர்களாக நியமித்து பட்டியல் வெளியிட்டுள்ளது, ஒன்றிய அரசு. அவர்களைப் பற்றிய விவரங்களைக் காண்போம்.

9. புதிய ஒன்றிய அமைச்சர்களுக்கு என்னென்ன துறை?

டெல்லி: புதிதாக பதவியேற்ற ஒன்றிய அமைச்சர்களுக்கு என்னென்ன துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

10. ஒரே வாரத்தில் சிம்பு வீடியோ படைத்த சாதனை

நடிகர் சிம்பு பதிவிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் பத்து மில்லியன் பார்வையைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.