ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @7am - இன்றைய செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 7, 2021, 6:44 AM IST

1. தமிழ்நாடு தடகள வீரர்களுக்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஐந்து தமிழ்நாடு தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையாக அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2. ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3. செப்டம்பரில் நீட் தேர்வு - மாணவர்களே தயாராகுங்கள்

கரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட, 2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆன்லைன் மூலம் இல்லாமல் வழக்கம்போல நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

4. மேற்கு கடலோர பகுதியில் மழை அதிகரிக்க வாய்ப்பு

மேற்கு கடலோரப் பகுதியில், ஜூலை 9ஆம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

5. ஜேஇஇ முதன்மை தேர்வுகள் தேதி அறிவிப்பு

மாணவர்களின் நலன் கருதி ஜூலை 20ஆம் தேதி முதல் ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

6. மத்திய அரசு பணிகளுக்கு அடுத்தாண்டு முதல் பொதுத் தேர்வு: ஒன்றிய அமைச்சர்

மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு, அடுத்தாண்டு (2022) தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

7. சீக்கியர்களின் புனித நூலை தங்க மையில் படியெடுக்கும் இசை ஆசிரியர்!

பஞ்சாப் மாநிலத்தில் இந்து குடும்பத்தில் பிறந்து, 'குரு கிரந்த் சாஹிப்' என்ற சீக்கியர்களின் புனித நூலால் ஈர்க்கப்பட்டு சீக்கிய மதத்தை தழுவியர், மங்கிரத் சிங். இசை ஆசிரியரான இவர், பாரம்பரிய முறையைப் பயன்படுத்தி சீக்கியர்களின் புனித நூலை தங்க மையில் படியெடுக்கும் பணியை மங்கிரத் சிங் ஒன்றரை வருடமாக மேற்கொண்டு வருகிறார்.

8. சியான் 60: இந்தியாவை சுற்றப்போகும் விக்ரம் - துருவ்!

‘கோப்ரா’ பட வேலைகளில் விக்ரம் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கியதும் விக்ரம் அதில் பங்கேற்பார்.

9. D43: ஹைதராபாத் வந்திறங்கிய மாளவிகா

தனுஷின் 43ஆவது படத்தின் படப்பிடிப்புக்காக மாளவிகா மோகனன் ஹைதராபாத் வந்துள்ளார்.

10. HBD MSD: தோல்வியில் முளைத்தெழுந்த வெற்றியின் தலைவன் தோனி!

இந்தியா அணியின் நிகர் இல்லா கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி ஜூலை 7 தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.