ETV Bharat / city

7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news@7AM - செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்..

7 மணி செய்திச்சுருக்கம்
7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 5, 2021, 6:58 AM IST

1. தமிழ்நாட்டில் இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதி

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை 5) முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.

2. தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்

கேளிக்கை விடுதிகளில் (Clubs) உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுகள் மற்றும் உணவகங்கள் மட்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

3. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஒலி வடிவிலும் பாடம்

கிராமப்புரங்களில் இணைய சேவை குறைவாக உள்ள பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஒலி வடிவிலான பாடங்கள் பயனுள்ளதாக இருக்கும் என பள்ளிக்கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சென்னை: புதிய தளர்வுகளில் கரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள்!

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் சென்னை மாநகராட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ளது.

5. தமிழ்நாடு முழுவதும் இன்று பேருந்து இயங்கும்!

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை 5) முதல் 50 விழுக்காடுப் பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

6. இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் இயங்க அனுமதி

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, 80 நாள்களுக்குப்பின் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி தந்துள்ளது.

7. மேகதாது அணை திட்டம்: கர்நாடக முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கர்நாடக மாநிலம் மேகேதாட்டில் அணைக்கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அம்மாநில முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

8. இன்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இயங்கும்!

இதுவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத பகுதிகளிலும் இன்று (ஜூலை 5) முதல் கடைகள் திறக்கப்படுகின்றன.

9. பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் 31 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. நீட் தேர்வு: சூர்யாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய பாஜக

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா பொய்களைப் பரப்பிவருவதாக பாஜக மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ் செல்வம் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.