ETV Bharat / city

7 மணி செய்தி சுருக்கம் Top 10 news @7am

author img

By

Published : Mar 3, 2021, 7:20 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திகள்  top 10 news @7am

'ராகுல் இளம் தலைவர்; பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்' - குஷ்பூவின் குசும்பு

ராகுல்காந்தி இளம் தலைவர்; பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அதனால் மக்கள் அவரைப் பார்க்கச் செல்கின்றனர் என பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

’வெற்றி பெறவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூறுகிறோம்’ - கே.என்.நேரு

குறுகிய காலத்தில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று ஓட்டு கேட்பது சிரமம் என்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதாக திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

தேர்தல் உலா 2021: நட்சத்திரத் தொகுதிகள் - எடப்பாடி

கடந்த 2017ஆம் ஆண்டு வரை சேலத்தின் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரு தொகுதி எடப்பாடி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடந்த அரசியல் மாற்றங்களில் எடப்பாடி தொகுதியின் பிரபல்யமும் ஒன்று. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொதுப் பணித்துறை அமைச்சரின் தொகுதியாக இருந்த எடப்பாடி, இப்போது அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் தொகுதியாகப் பரிணமித்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி கருக்கலைப்பு செய்யலாமா - உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?

பாலியல் வன்கொடுமைக்குள்ளான பாதிக்கப்பட்ட சிறுமி, 26 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் மதிய உணவுத் திட்டம்!

ஓராண்டுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் இன்று (மார்ச் 2) மீண்டும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உணவின் தரத்தை ஆய்வுசெய்தார்.

அறுவை சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெறமுடியும்: மகப்பேறு மருத்துவர் உதயபானு

அறுவை சிகிச்சை இன்றி சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெறமுடியும் எனவும்; அதற்கு பெண்கள் சில பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் மகப்பேறு மருத்துவர் உதயபானு தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா வீச முயன்ற இளைஞர் கைது!

மத்திய சிறைக்குள் 45 கிராம் கஞ்சாவை வீச முயன்ற நபரை காவல் துறையினர் துரத்திப் பிடித்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

'சாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு... தேர்தல் ஆதாயம் பெற கூட்டுச்சதி!'

உள்ஒதுக்கீட்டின் பெயரால் சாதிக் காய்களை நகர்த்தித் தேர்தல் ஆதாயம் பெற அதிமுக-பாஜக-பாமக கூட்டுச்சதி செய்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இரண்டே நாளில் ரூ.25,83,000 பறிமுதல்

தேர்தல் பறக்கும் படை சோதனையில் 25 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது என சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

கிணற்றில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு!

மரக்காணம் அருகே கிணற்றில் குளிக்கச்சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.