ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7AM - Etv bharat headlines

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @7am
7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Nov 10, 2020, 7:28 AM IST

நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்!

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாகியுள்ள நடராஜனை மண்ணின் மைந்தர் என குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'உள் இடஒதுக்கீட்டை அறிவித்து 69% இடஒதுக்கீட்டை அரசு காவு கொடுத்திருக்கிறது' - மு.க. ஸ்டாலின்

மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் உள் இடஒதுக்கீட்டை அறிவித்து 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் காவு கொடுத்திருப்பதாக தமிழ்நாடு அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

'மயான அமைதி காக்காமல் மீனவர்கள் நலன்காக்க முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும்'

இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைக்கத் தூதரகத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி மயான அமைதி காக்காமல் பிரதமரைத் தொடர்புகொண்டு தமிழ்நாடு மீனவர்கள் நலன்காக்க அவசர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

'அறிவு இல்லைனா கேட்டு தெரிஞ்சுகோங்க' - ஆர்டிஐ கேள்விக்கு அரசு அலுவலரின் ஆணவ பதில்

அடிப்படை வசதிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய மனுதாரருக்கு, தங்களுக்கு இணைய அறிவு இல்லையெனில் அறிவுள்ளவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பதிலளித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சரை வரவேற்க வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தால் இளைஞர் பலி?

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வழிநெடுகிலும் முதலமைச்சரை வரவேற்க அதிமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ள நிலையில், அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதிக்குழு அறிக்கை!

கரோனாவுக்கு பிறகான காலத்தில் பொது சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் வகையில் 15ஆவது நிதிக்குழு அறிக்கையைத் தயார் செய்துள்ளது.

சிபிஐக்கு செக் வைத்த அமரிந்தர்!

மாநில அரசின் அனுமதி இல்லாமல் விசாரணை மேற்கொள்ளும் சிபிஐயின் அதிகாரத்தை பஞ்சாப் அரசு திரும்பப்பெற்றுள்ளது.

ட்ரம்ப் நீக்கிய முக்கிய இரண்டு நபர்களை மீண்டும் நியமித்த பைடன்!

தற்போதைய அதிபர் ட்ரம்பால் நீக்கப்பட்ட முக்கிய இரண்டு ஆராய்ச்சியாளர்களை, கரோனா தடுப்புப் பிரிவின் பொறுப்பாளர்களாக புதிய அதிபர் ஜோ பைடன் பணி நியமனம் செய்துள்ளார்.

பிரிட்டன், அமெரிக்கா வரிசையில் உக்ரைன்: என்னவா இருக்கும்?

உக்ரைன் அதிபர் வெலோடிமிடர் ஜெலன்ஸ்கிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணி அமர்த்துதல் விழுக்காடு அதிகரிப்பு!

கடந்த அக்டோபர் மாதம் ஐடி-சாப்ட்வேர் மற்றும் சேவைத்துறையில், ஊழியர்கள் நியமனம் 7 விழுக்காடு உயர்ந்துள்ளதாக, நாக்குரி ஜாப் ஸ்பீக்ஸ் இன்டெக்ஸ் (Naukri JobSpeak Index) தகவல் தெரிவித்துள்ளது.

தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகாது - தயாரிப்பாளர்கள் திட்டவட்டம்

நல்ல தீர்வு ஏற்படும் வரை புதுப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகத் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முதல் முறையாக மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பையை வென்ற ட்ரையல்ப்ளேசர்ஸ்...!

சூப்பர்நோவாஸ் அணிக்கு எதிரான மகளிர் டி20 சேலஞ்ச் இறுதிப் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி கோப்பையை வென்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.