ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச்சுருக்கத்தைக் காணலாம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 4, 2021, 6:55 PM IST

1.மொட்டையடிக்க கட்டணமில்லை, வள்ளலார் சர்வதேச மையம்; அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் 112 புதிய அறிவிப்பு

கோயில்களில் மொட்டையடிக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது, வள்ளலார் சர்வதேச மையம் என அமைச்சர் சேகர் பாபு பேரவையில் இன்று 112 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

2.பேட்மிண்டனில் இந்தியாவுக்கு இன்று இரட்டைப் பதக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் தங்கப் பதக்கமும், மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

3.ஈரோட்டில் மாணவனுக்கு கரோனா... அரசு பள்ளி மூடல்!

சத்தியமங்கலம் அருகே அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

4.சாதனைப் படைத்த ரோஹித்... சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, 15 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

5.குத்துச்சண்டை வீராங்கனை போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழப்பு

கனடாவில் குத்துச்சண்டை வீராங்கனை போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6.கொடைக்கானல், ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம்!

கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

7.தங்கம் வென்ற மணிஷ்... ரூ.6 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற மணிஷ் நார்வாலுக்கு, 6 கோடி ரூபாய் பரிசுத் தொகையை ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

8.எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு காணொலிகளையும் வெளியிட கோரிக்கை

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் காணொலிகளையும் ஊடகங்களுக்கு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

9.தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10.கோடநாடு வழக்கு; கோவையில் தனிப்படை காவலர்கள் முகாம்!

கோடநாடு வழக்கு விசாரணைக்காக கோவையில் தனிப்படை காவலர்கள் முகாமிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.