1. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினி பயிற்சி - சபாநாயகர்
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினிப் பயிற்சி வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு இன்று (ஆக. 19) நடைபெற்ற பேரவை கூட்டத்தில் தெரிவித்தார்.
2. டாஸ்மாக் கடைகளை மூட முடியாதது மனநிறைவை அளிக்கவில்லை - நீதிபதி கிருபாகரன் வேதனை
உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியது திருப்தி அளித்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாததும் மனநிறைவை அளிக்கவில்லை என நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
3. குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம், சினிமா ஆகியத் தொழில்களில் பணி செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறலாம் என அறிக்கை வந்துள்ளது.
4. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - ரூ. 340 கோடியில் புதிய திட்டங்கள்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வேளாண் துறையில் 340 கோடி ரூபாய் செலவில் பல்வேறு புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
5. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் - விக்கிரமராஜா எச்சரிக்கை
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரித்துள்ளார்.
6. மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடைக்கோரி வழக்கு- ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடைச் சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய- மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7. அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலை
சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
8. ஹைதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் குழந்தைகள்- யுனிசெஃப் கவலை
ஹைதியில் கடந்த 14ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 5 லட்சம் குழந்தைகள் உள்ளிட்ட 12 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து வயதிற்குள்பட்ட 1,67,000 குழந்தைகள் உள்பட 3,85,000 பேர்களின் அவசர தேவைகளுக்கு உதவ 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்றும் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
9. 4*400 கலப்புத்தொடர் ஓட்டம்: உலகத்தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழர்
உலகத்தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கலப்புத்தொடர் ஓட்டத்தில் தமிழ்நாட்டைச்சார்ந்த ஸ்ரீதர் மற்றும் சமி, கபில், பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
10. கமல் ஹாசன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சுஹாசினி
கமல் ஹாசன் வீட்டில் நடிகை சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.