ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 AM - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 23, 2021, 7:01 AM IST

1. பாதிரியார் பொன்னையா போன்றோரை ஸ்டாலின் டூல்-கிட்டாக பயன்படுத்துகிறாரா - கரு.நாகராஜன் சந்தேகம்

பிரதமருக்கும், பாஜகவுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதற்காக பாதிரியார் பொன்னையா போன்றவரை டூல்-கிட்டாக முதலமைச்சர் ஸ்டாலினே அனுப்பி வைத்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2. 4 பேர் திட்டினாலும், 400 பேர் பாராட்டுவார்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

குட்கா, பான்பராக் போன்ற தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளை அடைத்தால், நான்கு பேர் திட்டினாலும், 400 பேர் பாராட்டுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

3. கட்சி பின்னே நிற்கும் - விஜயபாஸ்கர் விவகாரத்தில் அதிமுக அறிக்கை

திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு, காவல் துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்துவருகிறது; இந்த விவகாரத்தில் விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

4. முதலமைச்சரின் கடிதம் உண்மையா... அமைச்சரின் பேட்டி உண்மையா : அண்ணாமலை கேள்வி!

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்த கருத்து உண்மையா அல்லது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் பேட்டி மூலம் தெரிவித்த தகவல் உண்மையா என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு உண்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

5. தனுஷ்கோடியில் இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய தளபதி ஆய்வு

தனுஷ்கோடி - அரிச்சல்முனை பகுதியில், இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி அஜந்தா பகதூர் சிங் ஆய்வு மேற்கொண்டார். இதனால் மீனவர்கள், சுற்றுலாப்பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

6. மன்னார் வளைகுடாவில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!

வனத்துறையின் சார்பில் மன்னார் வளைகுடா தீவு பகுதியில் இருந்து 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இன்று அகற்றப்பட்டன.

7. மகாராஷ்டிராவில் நிலச்சரிவு: சிக்கியிருக்கும் 400 பேர்

மும்பை: ராய்காட் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 300லிருந்து 400 பேர்வரை சிக்கியிருக்கின்றனர்.

8. ஒலிம்பிக்கில் தமிழர்கள்: போட்டிகளின் அட்டவணை

தமிழ்நாட்டிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 12 வீரர், வீராங்கனைகளின் போட்டி விவரங்கள் குறித்த தொகுப்பை காணலாம்.

9. நான் பிராமணனாக உணர்கிறேன் - சுரேஷ் ரெய்னா பேச்சுக்கு ரசிகர்கள் கொந்தளிப்பு

சென்னை அணிக்கு நீண்ட நாளாக விளையாடிவருவதாலும், தமிழ்நாடு கலாசாரத்தை உற்றுநோக்கி வருவதாலும் நானும் பிராமணனைப்போல் உணர்கிறேன் என்று சிஎஸ்கே நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

10. நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை?

ஆபாச பட விவகாரத்தில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவி ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.