ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS
TOP 10 NEWS
author img

By

Published : Feb 9, 2021, 7:06 AM IST

1. விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: அரசு ஆணை வெளியீடு

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

2. வஞ்சிக்கப்படும் ஆசிரியர்- உறுதுணையாக இருந்து சக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரம்: தொடக்க கல்வி அலுவலகத்தின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடக் கோரி ஆசிரியர் ஒருவருக்கு உறுதுணையாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

3. ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு - திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்ற தலைவரைக் கொண்டு கவுன்சில் கூட்டம் நடத்த எதிர்ப்புத் தெரிவித்தும், ஒப்பந்தப் பணிகளில் தரகுத் தொகை பெற்றது தொடர்பாக விசாரணை கேட்டும் திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4. அமமுக வாகனங்களைத் திருப்பி அனுப்பும் காவல் துறை!

சென்னை எல்லையான செப்பேடு பகுதியில் அமமுக வாகனங்களைக் காவல் துறையினர் தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பிவருகின்றனர்.

5. கிருஷ்ணகிரி அருகே 10 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை!

தர்மபுரி: கிருஷ்ணகிரி அருகே 10 வயது சிறுவன் கடத்தி கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6. குன்னூர் அருகே அனுமதியில்லாமல் செயல்பட்ட 15 தங்கும் விடுதிகளுக்குச் சீல்!

குன்னூர் அருகே யானைகள் நடமாட்டம் நிறைந்த வனப்பகுதியில் உள்ள பிரபல சொகுசு விடுதிக்குச் சீல்வைக்கப்பட்டது.

7. தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்

புவனேஷ்வர்: ஆண் வாரிசு இல்லாததால், சாலை விபத்தில் உயிரிழந்த தனது தந்தைக்கு இளம்பெண் ஒருவர் இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

8. மோடியை விமர்சித்த காங்கிரஸ் எம்பிக்கு தொலைபேசியில் மிரட்டல்

மாநிலங்களவையில் நேற்று (பிப். 8) மோடி பேசியதை விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்குத் தொலைபேசியில் மிரட்டல்விடுக்கப்பட்டுள்ளது.

9. கிரிக்கெட் ஒளிபரப்புக்கு ட்ரோன் உபயோகிக்க அனுமதி!

டெல்லி: 2021இல் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ட்ரோன் மூலம் படம்பிடித்து ஒளிபரப்பு செய்ய பிசிசிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

10. பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு!

பிலிப்பைன்ஸில் திங்கள்கிழமை (பிப். 8) நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.