ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM - TOP 10 NEWS @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10
TOP 10
author img

By

Published : Feb 3, 2021, 7:10 AM IST

மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை: ராமேஸ்வரம் மீன்வளத் துறை அறிவிப்பு

ராமநாதபுரம்: காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீன்வளத் துறை தடைவிதித்துள்ளது.

2. 'அரசியலில் லாலி பாப் பேபி ஸ்டாலின்தான்' - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான மந்தைவெளி அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேசைப் பந்தாட்ட உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் திறந்துவைத்தனர். இதற்காக மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 65 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

3. ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்வையிடத் தடை: சசிகலா வருகை காரணமா?

சென்னை: சசிகலா வரும் 7ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ள நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அருங்காட்சியம், அறிவுத்திறன் பூங்காவின் இறுதிப் பணிகள் நடந்துவருவதால் பொதுமக்கள் பார்வைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது எனப் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

4. மாநகரப் பேருந்தை கடத்தியவருக்கு வலைவீச்சு!

சென்னை: அண்ணா நகர் பேருந்து பணிமனையிலிருந்து மாநகரப் பேருந்தை கடத்திச் சென்று பாடி மேம்பாலம் அருகே விட்டுச் சென்றவரை காவலர்கள் தேடிவருகின்றனர்.

5. அருண் விஜய் படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்!

சென்னை: ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில் 'குக் வித் கோமாளி' பிரபலம் நடிக்கவுள்ளார்.

6. குன்றத்தூர் அருகே செடி நடும் பணியாளர்கள் மீது லாரி மோதி மூவர் உயிரிழப்பு

சென்னை: குன்றத்தூர் அருகே நெடுஞ்சாலையில் செடி நடும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7. ராஜஸ்தானில் விவசாயி கொலை: காவலர்கள் விசாரணை!

ராஜஸ்தான்: தோல்பூரில் ஆறு பேர் ஒன்று சேர்ந்து விவசாயியை கொலைசெய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

8. சென்னை முதல் டெஸ்டில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் சென்னை டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை எனத் தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

9. அட்டகாசமான அம்சங்களுடன் சந்தையை அதிரவைக்கும் போக்கோ m3!

இந்திய சந்தையில் போக்கோ m3 ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது.

10. மியான்மரில் ராணுவ ஆட்சி: விமானங்கள் நுழைய தடைவிதிப்பு!

நேப்பியேட்டோ: மியான்மரில் ஓராண்டு அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உரிய அனுமதியின்றி விமானங்கள் புறப்படவும், நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.