ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM - Top 10 News @ 5PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 News @ 5PM
Top 10 News @ 5PM
author img

By

Published : Nov 3, 2021, 5:23 PM IST

1.தீபாவளிக்கு நாளை முதல் 4 நாள்கள் விடுமுறை... மாணவர்கள் மகிழ்ச்சி...

தீபாவளியை முன்னிட்டு வரும் சனிக்கிழமை(நவ.6) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

2.தொடர்ந்து சீனாவில் தொழில் செய்ய விரும்பாத பெருநிறுவனங்கள் - வெளியேறிய யாஹூ

சீனாவின் புதிய இணையதள கொள்கைகள் பெரு நிறுவனங்களுக்கு அதிகளவு நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனால் தொடர்ச்சியாக சீனாவை விட்டு பல நிறுவனங்கள்வெளியேறி வரும் சூழலில், யாஹூ நிறுவனமும் அந்த முடிவை எடுத்துள்ளது.

3.நீட் தேர்வில் பழங்குடியின மாணவி வெற்றி!

கோவையில் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் ப்ளஸ் 2 முடித்த முதல் பழங்குடியின மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

4.டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

5.சீனாவில் சீறிப்பாயும் புதுவகை கரோனா; புதிய கட்டுப்பாடுகள் அமல்

சீனாவில் புதிய வகை கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன.

6.11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நவ.9இல் வெளியீடு!

பதினொன்றாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

7.ஆன்லைன் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் சிக்கிய இரண்டு சிறுமிகள் மீட்பு!

ஈரோட்டில் ஆன்லைன் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் சிக்கிய இரண்டு சிறுமிகளை காவல் துறையினர் மீட்டனர். இதற்கு தரகராக இருந்த அங்குசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

8.ஐடி ஊழியர் உயிரிழப்பு: டெலிகாம் கம்பெனி மீது மாநில நெடுஞ்சாலை துறை புகார்

சாலை பள்ளத்தால் நிலைதடுமாறி பேருந்தில் சிக்கி ஒருவர் பலியான சம்பவத்தில் டெலிகாம் கம்பெனி மீது மாநில நெடுஞ்சாலை துறை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

9.புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ராம் சரண்!

தெலுங்கு நடிகர் ராம் சரண் மறைந்த புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

10.சாதிபடுத்தும்பாடு - தினமும் 150 கிலோ மீட்டர் பயணம் செய்யும் ஆசிரியர்!

பட்டியலினத்தைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தால், வாடகைக்கு வீடு தர மறுத்து, தினமும் 150 கிலோ மீட்டர் பயணம் செய்து பாடம் நடத்தும் நிலை ஆசிரியர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.