ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5pm - Etv Bharat Top 10

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

top-10-news-at-5pm
top-10-news-at-5pm
author img

By

Published : Oct 5, 2020, 5:14 PM IST

ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.

உயர் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்: முதலமைச்சர் திறந்துவைப்பு

சென்னை: உயர் கல்வித் துறை சார்பில் 58 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

அரசு ஆணவப்போக்கை மாற்றாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகும் - மாயாவதி

லக்னோ: ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரைச் சந்திக்க சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் காவல் துறை தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு ஆணவப்போக்கை மாற்றாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகும் என மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை: உயர் அலுவலர்களுக்கு ஆளுநர் அழைப்பாணை!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் மணீஷ் சுக்லா சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதனைக் குறித்து விசாரிக்க அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர், ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் (உள் துறை), டிஜிபி ஆகியோருக்கு அழைப்பாணை விடுத்துள்ளார்.

யூனிடக் ஈப்பன் மன்னிப்புக் கேட்டகவில்லையென்றால் வழக்கு தொடரப்படும் - சென்னிதலா

திருவனந்தபுரம் : யூனிடக் பில்டர்ஸ் தலைவர் சந்தோஷ் ஈப்பன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுமென கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2020: தொடர் வெற்றியை தக்கவைப்பது யார்? பெங்களூரு vs டெல்லி!

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்கிறது.

'ராக்கெட்ரி' படத்தில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இசை - சாம் CS பெருமிதம்

சென்னை: 'ராக்கெட்ரி' படத்தில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவை பயன்படுத்தி பின்னணி இசையை உருவாக்கியுள்ளதாக இசையமைப்பாளர் சாம் தெரிவித்துள்ளார்.

‘இந்த வெற்றி இனி வரும் போட்டியிலும் பிரதிபலிக்கும்’ - தோனி நம்பிக்கை!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியில் சிஎஸ்கே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வளைகுடா நாடுகள் - துருக்கி அதிபர் குற்றச்சாட்டு

பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் விதமாக பல்வேறு வளைகுடா நாடுகள் செயல்பட்டுவருவதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடருமா?

கிரே பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள நிலையில், பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.