1. ஜல்லிக்கட்டில் இனி நாட்டு மாடுகள்: நீதிமன்றம் உத்தரவு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. தனியார்மயமாக்கலை திமுக அரசு ஏற்காது - தங்கம் தென்னரசு
பொது சொத்துகளை தனியார்மயமாக்குவது குறித்த சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை கொண்டு வந்த நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
3. பொது சொத்துகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது - மு.க. ஸ்டாலின்
பொதுத்துறை நிறுவன சொத்துகளை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. கருணாநிதியின் சிலை - சர்ச்சையும், கவிதையும்
பணியை ஆரம்பித்தபோது சட்ட ரீதியான சிக்கலை அதிமுக கொடுத்தது. ஆனால், அதனை திராவிடர் கழகம் முறியடித்து 1975ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டது.
5. சுங்க சாவடி கட்டணம் குறைப்பு - முதலமைச்சருக்கு வேல்முருகன் நன்றி
சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு மற்றும் அகற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததற்கு எம்.எல்.ஏ. வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
6. ஏலகிரியில் ரூ.4 கோடி மதிப்பில் உள் விளையாட்டரங்கம் - அமைச்சர் மெய்யநாதன்
ஏலகிரி மலைப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.4 கோடி மதிப்பில் உள்விளையாட்டரங்கம் அமைக்க நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
7. 'மருத்துவ சேர்க்கை கொள்கை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு' - மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை
மருத்துவ சேர்க்கைக்கான கொள்கை, தேசிய தகுதித் நுழைவுத் தேர்வினை எதிர்ப்பதாக (நீட் தேர்வு) மருத்துவத் துறை சார்பில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. முன்னாள் எம்.பி சந்தன் மித்ரா மறைவு; பிரதமர் இரங்கல்
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த ஊடகவிலியலாருமான சந்தன் மித்ரா (65) இன்று (செப். 2) உடல்நலக் குறைவால் காலமானார்.
9. THE OVAL TEST: அஸ்வின் எனும் துருப்புச் சீட்டை பயன்படுத்துவாரா கோலி?
ஓவல் மைதானம் காலங்காலமாக சுழற்பந்துவீச்சுக்கு கைக்கொடுக்கும் என்பதால், உலகின் முதல்தர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினை அணிக்கு அழைப்பதுதான், இடிந்து கிடக்கும் இந்திய அணிக்கு இருக்கும் ஒரே வழி. இன்றைய போட்டியில் அஸ்வின் களமிறக்கப்படும்பட்சத்தில் ரூட் vs அஸ்வின் என்ற போரை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
10. HBD சுதீப்... ஜலதரங்கன் பிறந்ததினம் இன்று
நடிகர் சுதீப் இன்று (செப் 2) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.