ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 PM

author img

By

Published : Aug 28, 2021, 2:57 PM IST

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

1. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் - அதிமுக, பாஜக வெளிநடப்பு

மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார்.

2. இலங்கை அகதிகள் முகாம், ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள்’ எனத் திருத்தம் - முதலமைச்சர் ஸ்டாலின்

இலங்கை தமிழர் அகதிகள் முகாம் இன்று முதல் "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள்" என அழைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.

3. சென்னையில் ஜெனோம் ஆய்வகம் - ராதாகிருஷ்ணன் தகவல்

கரோனா மரபியல் மாற்றங்கள் குறித்து தமிழ்நாட்டில் ஆய்வு செய்ய, அடுத்த மூன்று தினங்களில் சோதனை முயற்சியாக ஆய்வகம் செயல்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

4. பாட்டாலே பதிலளித்த ஓபிஎஸ்: பேரவையில் சிரிப்பலை

மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது தனது நிலைப்பாட்டை பாட்டுப் பாடி பதிலளித்துள்ளார் ஓ. பன்னீர்செல்வம். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

5. கோடநாடு வழக்கு எழுப்பும் கேள்விகள்?

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை அலுவலரின் வாக்குமூலமும், அதில் எழுந்துள்ள பல கேள்விகள் குறித்து காணலாம்.

6. கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட மைசூர் மாணவி: வெவ்வேறு மாநிலங்களில் கைதான நபர்கள்

மைசூர் பல்கலைக்கழக மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், மாணவியின் காதலர் அளித்த அடையாளங்களின் உதவியுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் துறையினர் வெவ்வேறு மாநிலங்களில் கைது செய்துள்ளனர்.

7. சொன்னபடி வேட்டையைத் தொடங்கிய அமெரிக்கா: ஆப்கனில் திக்... திக்... திக்...!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக தங்கள் நாட்டு வீரர்களின் மரணத்திற்கு விலை கொடுக்க வேண்டும் எனவும், வேட்டையாடுவோம் என்றும் அமெரிக்க அதிபர் கூறியது கவனிக்கத்தக்கது.

8. இது கரோனா காலம்... கர்ப்பிணிகளே அலட்சியம் கூடாது; அச்சமும் வேண்டாம்!

கரோனா காலத்தில் கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய உணவு பற்றியும், எக்லாம்ப்சியாவிலிருந்து (கர்ப்ப கால வலிப்பு நோய்) அவர்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்கான முறை குறித்தும் காணலாம்.

9. புதிய வாகன பதிவெண்: 'பிஎச்' சீரிஸ் அறிமுகம்

புதிய வாகன பதிவில் BH(Bharat series)என துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.

10. ’தம்பி ஜி.வி.பிரகாஷூக்கு விருதுகள் உண்டு’ - இயக்குநர் சீனு ராமசாமி

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் 'இடிமுழக்கம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.