ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 PM

author img

By

Published : Aug 27, 2021, 2:47 PM IST

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

1. கோடநாடு விவகாரம் - விசாரணைக்கு தடை இல்லை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ரூ.317 கோடி ஒதுக்கீடு - ஸ்டாலின்

வீடு, இதர உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 261 கோடியே 54 லட்சம் ரூபாயும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பை உறுதிசெய்ய 12 கோடியே 25 லட்ச ரூபாயும், மேம்பட்ட வாழ்க்கைத் திறனை மேம்படுத்த 45 கோடியே 61 லட்ச ரூபாயும் என மொத்தம் 317 கோடியே 40 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3. மேகதாது - தமிழ்நாட்டின் உரிமையை காப்போம் - அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை காப்போம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

4. பள்ளிகளில் புதிய நெறிமுறைகள் - பேசுவதற்குத் தடையா?

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

5. ’ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை ஸ்டாலின் தீர்த்து வைக்க வேண்டும்’ - மைத்ரேயன் கோரிக்கை

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, அதிலுள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் கோரியுள்ளார்

6. பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியீடு

பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

7. மாநிலங்களவை இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் எம்.எம் அப்துல்லா வேட்பு மனு தாக்கல்

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கான மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா, சட்டபேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தார்.

8. இந்தியாவின் கிரேட்டா தன்பெர்க்: பருவநிலை மாற்றம் குறித்து புத்தகம் எழுதிய 10 வயது சிறுவன்!

பத்து வயதிலேயே பருவநிலை மாற்றம் குறித்து புத்தகம் எழுதியுள்ள சிரிஷ், இரண்டு சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

9. ஐஎஸ் அமைப்புக்கு தாலிபானுடன் தொடர்பு உள்ளது -அமருல்லா சாலே

ஐஎஸ் அமைப்புடன் தாலிபானுக்கு ஆழமானத் தொடர்புள்ளது என ஆப்கன் காபந்து அதிபர் அமருல்லா சாலே தெரிவித்துள்ளார்.

10. கசடதபற வெளியீட்டில் சிக்கல் - பேச்சுவார்த்தையில் வெங்கட் பிரபு!

சிம்பு தேவன் இயக்கியுள்ள கசடதபற திரைப்படம் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.