ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 PM

author img

By

Published : Aug 26, 2021, 3:08 PM IST

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

1. ஜெ. பல்கலை விவகாரத்தில் திமுக காழ்ப்புணர்ச்சி - அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்புச் செய்துள்ளது. ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்வதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர்.

2. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

3. அண்ணாமலைக்கு எதிராக மதனின் புதிய ஆடியோ - பரபரப்பு தகவல்

கேடி. ராகவன் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் பேசும் புதிய ஆடியோ ஒன்றை மதன் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ளார்.

4. ரேஷன் கடைகளுக்கு உத்தரவு - இனி தரமான அரிசிதான்!

பொது விநியோக அமைப்பு (பிடிஎஸ்) மூலம் தமிழ்நாடு அரசு விரைவில் தரமான அரிசியை வழங்கும் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பேரவையில் தெரிவித்தார்.

5. மக்களைத் தேடி மருத்துவம்: பயனடைந்த 2,07,838 பேர்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இன்றுவரை (ஆக. 26) இரண்டு லட்சத்து ஏழாயிரத்து 838 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

6. ’தடையின்றி மின்சாரம் கிடைத்திட ரூ.58 கோடி செலவிடப்பட்டுள்ளது’ - தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி: மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகுக்கும் வகையில் அரசு சார்பாக 58 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

7. 'நான்கு கால் நண்பன் அவன்' - நாய்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26ஆம் தேதி சர்வதேச நாய்கள் நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. நிலத்தில் வாழும் உயிரினங்களில் மனிதர்களுடன் அன்போடு பழகக்கூடிய ஒரே நண்பனான நாய்களின் இனத்தைக் காப்போம் என இந்த நாளில் உறுதியேற்போம்.

8. துபாயின் அடுத்த பிரமாண்டம் 'உலகின் மிக உயர ராட்டினம்'

துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய, மிக உயரமான ராட்டின சக்கரம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

9. ஆப்கனிலிருந்து மக்களை மீட்பதே அரசின் நோக்கம் - அமைச்சர் ஜெய்சங்கர்

ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

10. எழும்பூர் நீதிமன்றத்தில் மீரா மிதுன்

சென்னை: சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுனுக்கு வழக்குப்பதிவு செய்து எம்.கே.பி. நகர் காவல் துறையினர் இன்று (ஆகஸ்ட்.26) போலீஸ் காவல் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.