ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM - இன்றைய முக்கியச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 25, 2021, 2:35 PM IST

1. கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிப்பா? - பேரவையில் விவாதம்

கலைஞர் நூலகத்திற்காக பென்னிகுவிக் இல்லம் இடிக்கப்படுவதாக ஒரு தகவல் பரவிய நிலையில், இது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் உரிய பதிலை அளித்துள்ளார்.

2. தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு மழை

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றிலிருந்து அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3. 'அதிமுக ஆட்சியில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை'

அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.

4. வன்னியர் இடஒதுக்கீடு - தடை விதிக்க மறுப்பு

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

5. 'எதிர்க்கட்சிகளைப் பேசவிடுங்கள்' - அமைச்சர்களுக்கு கடிவாளம் போட்ட ஸ்டாலின்

பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கீடு செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஸ்டாலினின் இந்த நடவடிக்கை பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

6. பொறியியல் படிப்பில் சேர கூடுதல் விண்ணப்பம்

பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கான தேதி விவரங்களையும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

7. இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 648 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

8. பாரா ஒலிம்பிக்: சோனல்பென் மதுபாய் படேல் தோல்வி

பாரா ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளான இன்று (ஆகஸ்ட் 25) பெண்கள் தனிநபர் சி-3 டேபிள் டென்னிஸ் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சோனல்பென் மதுபாய் படேல் தோல்வியடைந்தார்.

9. கருணாநிதிக்கு தங்க பேனா, மகனுக்கு பிரபாகரன் பெயர்: விஜயகாந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கேப்டன் என்றால் தல தோனியோ, விராட் கோலியோதான் மனதில் வந்து நிற்பார்கள். ஆனால் உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் தமிழர்களின் நெஞ்சங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டனாக குடியிருப்பவர் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.

10. பீஸ்ட் அப்டேட் - அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

நடிகர் விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.