ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்...

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 16, 2021, 3:06 PM IST

1. அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவோம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர்

சென்னை: அறிவித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் விடமாட்டோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

2. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஆக.19) மற்றும் வெள்ளிக்கிழமை (ஆக.20) மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3. 'மக்கள் மனசுல நின்னுட்டாரு' - ஸ்டாலினின் 100 நாள் ஆட்சிப் பாடல்

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நூறு நாள்களை நிறைவுசெய்துள்ள நிலையில், அது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 'வந்துட்டாரு வந்துட்டாரு சொல்லி அடிச்சு செஞ்சிட்டாரு... வந்துட்டாரு வந்துட்டாரு மக்கள் மனசுல நின்னுட்டாரு' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

4. சிறு அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவ மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்- ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு கரோனா தொற்றின் சிறு அறிகுறி இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

5. அருணகிரிநாதர், ஆனைமுத்து, மதுசூதனன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம்

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் குறித்து இரங்கல் குறிப்புத் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

6. மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடக்கம்

கரோனா காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இன்றுமுதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

7. பெகாசஸ் உளவு விவகாரம்: ஆய்வுசெய்ய குழு அமைத்த மத்திய அரசு

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக ஆய்வுசெய்ய வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

8. ஆப்கான் விமான போக்குவரத்து ரத்து

ஆப்கானில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து, தலைநகர் காபூல் விமான நிலையம் முடக்கப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

9. ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராக அரசு அதிகளவில் நிதியளிக்கும்: அனுராக் தாக்கூர்

வரும் 2024, 2028 ஒலிம்பிக் தொடர்களை கருத்தில் கொண்டு டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்திற்கு (TOPS) அரசு பெரிய அளவில் நிதியளிக்கும் என்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

10. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.