ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM - இன்றைய முக்கிய 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 13, 2021, 2:53 PM IST

1. அனைத்து துறைகளிலும் 'தமிழ் ஆட்சி மொழி'

அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்த வலியுறுத்தப்படும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2. 'வெள்ளை அறிக்கை பெயரில் வெற்று அறிக்கை' - ஓபிஎஸ்-ஈபிஎஸ் காட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யாததைக் கண்டித்தும், வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் கூறி சட்டப்பேரவையின் முதல் நாளில் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

3. பெட்ரோல் வரி ரூ. 3 குறைப்பு

பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

4. பட்ஜெட்: 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்வு

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

5. தமிழ்நாடு பட்ஜெட்: பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு

நடப்பு நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 32,599 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

6. மகளிர் அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி... மகப்பேறு கால விடுப்பு நீட்டிப்பு!

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

7. காவல்துறைக்கு ரூ.8,930 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், காவல்துறைக்கு ரூ.8,930 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

8. ஜம்முவில் பாஜக பிரமுகர் வீட்டில் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம்

ரஜோரியில் உள்ள பாஜக பிரமுகரின் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

9. Tokyo Paralympics: இந்திய அணிக்கு வாழ்த்தி வழியனுப்பும் விழா!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 54 வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு வாழ்த்தி வழியனுப்பும் விழா ஒன்றிய விளையாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்டது.

10. ஓடிடியில் வெளியான நயன்தாராவின் நெற்றிக்கண்

நடிகை நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.