ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

3 மணி செய்தி
3 மணி செய்தி
author img

By

Published : Mar 27, 2021, 3:14 PM IST

1. குப்பைச் சேகரிக்கும் வாகனத்தில் புதுமையான முறையில் தேர்தல் விழிப்புணர்வு

தூத்துக்குடி: குப்பைச் சேகரிக்கும் வாகனத்தின் மூலம் புதுமையான முறையில் தேர்தல் விழிப்புணர்வை மாவட்டத் தேர்தல் அலுவலர் செந்தில் ராஜ் தொடங்கிவைத்தார்.

2. தொகுதியில் உள்ள குழந்தைக்குக்கூட என் பெயர் தெரியும்! - ஜெயக்குமார்

ராயபுரம் தொகுதியில் உள்ள குழந்தைக்கும் என் பெயர் தெரியும் என்று கூறும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தொடர்ந்து 7ஆவது முறையாக இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

3. 'குமரியில் சரக்குப் பெட்டகத் துறைமுகம் வராது, திமுக பொய்ப் பரப்புரை செய்கிறது' - முதலமைச்சர்!

கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைக்கப்படும் எனத் திமுகவினர் பொய்ப் பரப்புரை செய்துவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

4. இஸ்லாமியர்களிடம் வாக்குச் சேகரித்த சேலம் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர்!

சேலம்: இஸ்லாமியர்களிடம் சேலம் வடக்குச் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜி. வெங்கடாஜலம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

5. நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் பரப்புரை... மக்கள் உற்சாக வரவேற்பு

கன்னியாகுமரி: நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், வடசேரி பகுதியில் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

6. வரும் தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லை - இலட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் அறிக்கை

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது இலட்சிய திமுக கட்சி யாரையும் ஆதரிக்கவில்லை என நடிகரும், அக்கட்சியின் தலைவருமான டி. ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

7. தடுப்பூசி போட்டுக்கொண்ட சூர்யா பட வில்லனுக்கு கரோனா பாதிப்பு

இந்த மாத தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார் நடிகர் பரேஷ் ராவல். தற்போது அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

8. வங்க தேச காளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு!

வங்கதேசத்தில் உள்ள நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த காளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார்.

9. திருணமூல்-மா.கம்யூனிஸ்ட் ரகசிய கூட்டாளிகள்: பாஜக விமர்சனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திருணமூல் ஆகியவை ரகசிய கூட்டாளிகள் - இது பாஜக பரப்புரையின் புதிய முழக்கம்.

10. நடந்தது சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு.. ஆகையால்... தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டு, பின்னர் திருமணத்துக்கு மறுத்த இளைஞர் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் பெண் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.