1. 'ஆக. 14இல் வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்'
வரும் 14ஆம் தேதி வேளாண் துறைக்குத் தனியாக நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. ’கருணாநிதியின் நினைவின்றி இயக்கமில்லை’ - ஸ்டாலின் உருக்கம்
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் கருணாநிதி நினைவின்றி இயக்கமில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
3. 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. வாக்காளர் பட்டியல் திருத்தம் நவம்பர் முதல் தொடக்கம்
தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதிமுதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகாம் நடைபெறுகிறது. மேலும் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தகுதி ஏற்பு நாளாக கணக்கிட்டு சிறப்புத் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. மீண்டும் கிரானைட் தொழில் தொடங்க அனுமதி - அமைச்சர் மூர்த்தி
மதுரை: கிரானைட், கல் குவாரி தொழிலை மீண்டும் தொடங்க சட்டவிதிகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படும் என வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
6. 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு இன்று தொடக்கம்
தமிழ்நாட்டின் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு இன்று தொடங்கி நடந்துவருகிறது.
7. விவசாயிகளின் போராட்டக் களத்திற்குச் செல்லும் ராகுல்
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜந்தர் மந்தர் பகுதிக்கு, நேரடியாகச் சென்று ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்.
8. கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் - பிரதமர் மோடி
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, இனி மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
9. தோற்றது ஹாக்கி அணி அல்ல இந்தியா எனும் நாடு - வெல்டன் வந்தனா
கடந்த தோல்வியின்போது, தாழ்த்தப்பட்டவள், பிற்படுத்தப்பட்டவள் என்று சிலரால் எந்த கட்டாரியா வசை சொற்களையும், உளவியல் ரீதியாக கஷ்டத்தை சந்தித்தாரோ அதே கட்டாரியா தான் இன்றைய போட்டியில் இந்தியாவும், தி கிரேட் பிரிட்டனும் 2-2 என்று சமநிலையில் இருந்தபோது மூன்றாவது கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.
10. இந்தியன் 2 வழக்கு: தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட அனுமதி
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.