ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 PM
1 PM
author img

By

Published : Feb 11, 2021, 1:19 PM IST

1. வாங்கிய கடனுக்காக 8 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கட்டிய வட்டித் தொகை இவ்வளவா?

மதுரை: தமிழ்நாடு அரசு தான் வாங்கிய கடனுக்காக கடந்த எட்டு ஆண்டுகளில் கட்டிய வட்டித் தொகை மட்டும் ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் என்று மத்திய தலைமை நிதி தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

2. ‘ஓபிஎஸ்ஸுக்கு தண்டனை கொடுக்க திமுகவை வெற்றிபெறச் செய்யுங்கள்’ - உதயநிதி

தேனி: ஓ. பன்னீர்செல்வத்திற்கு தண்டனை கொடுக்க திமுகவை வெற்றிபெறச் செய்யுமாறு தேனி மாவட்டத்தில் மேற்கொண்ட பரப்புரையின்போது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி கேட்டுக்கொண்டார்.

3. தான் படித்த பள்ளிக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி அளித்த முன்னாள் மாணவர்!

விழுப்புரம்: தான் படித்த கிராம பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் ஒன்றரை கோடி ரூபாய் செலவழித்து பள்ளி கட்டத்தை சீரமைத்து கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4. கரோனாவால் நாடு திரும்பிய தமிழர்களுக்கான சிறப்புத் திட்டம் அறிவிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வெளிநாடுகளிலிருந்து, நாடு திரும்பிய தமிழர்களின் நலனைக் கருத்தில்கொண்டு புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

5. மின்சார மேலாண்மை இயக்குநரை பணிமாற்றம் செய்ய வேண்டும் - மின்வாரிய சங்கம்

சென்னை: மின்சார மேலாண்மை இயக்குநரைப் பணிமாற்றம் செய்ய வேண்டும் என அரசிற்கு மின்வாரிய சங்கம் சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

6. விமான நிலைய பெயர் மாற்றம்: கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்த தமிழ்நாடு எம்பி

சென்னை விமான நிலைய முனையங்களின் பெயர்களை நீக்கியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

8. சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்.18இல் தொடங்குகிறது!

சென்னை சர்வதேச திரைப்பட விழா, பிப்ரவரி 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் 53 நாடுகளைச் சேர்ந்த 91 திரைப்படங்கள் பங்குபெற உள்ளன.

9. 'ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்'!

புதுச்சேரி: ஜனநாயகத்தை காப்பாற்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் 'சமூக ஊடகத்தில் இணையுங்கள்' என்ற புதிய பரப்புரை திட்டம் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது.

10. 'பாங்காங் ஏரி பகுதியில் இருதரப்பு ராணுவமும் பின்வாங்குகிறது' - ராஜ்நாத் சிங்

சீன எல்லையில் பதற்றமான சூழலைத் தணிக்கும்விதமாக பாங்காங் ஏரி பகுதியில் இருதரப்பு ராணுவமும் பின்வாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.