ETV Bharat / city

பகல் 11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @11AM - சென்னை

ஈடிவி பார்த்தின் பகல் 11 மணி செய்திச்சுருக்கம்..

பகல் 11 மணி செய்திச்சுருக்கம்
பகல் 11 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 6, 2021, 11:35 AM IST

1. 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8ஆம் தேதிக்கு பின் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2. விநாயகர் சிலைகள் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

விநாயகர் சிலைகள் வைத்து, ஊர்வலம் எடுத்து செல்ல அரசு தடை விதித்துள்ளது குறித்து இந்து முன்னனி, பொதுமக்களுடன், டி.எஸ். ஆலோசணை கூட்டம் நடத்தினார்.

3. முறைகேடாக சொத்து சேர்த்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு

கோயம்புத்தூரில் முறைகேடாக சொத்து சேர்த்த சூலூர் முன்னாள் காவல் ஆய்வாளர் தங்கராஜ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

4. பாஜக தலைவர் அண்ணாமலை 'காமெடி பீஸ்' - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

வைகை புயலுக்கு பின் நமக்கு பொழுதுபோக்கு பாஜக தலைவர் அண்ணாமலைதான் என விருதுநகரில் எம்.பி மாணிக்கம்தாகூர் கூறுனார்.

5. குட்டப்பட்டி நாராயணன் மணிமண்டபம் - திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி

சேலம் அருகே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குட்டப்பட்டி நாராயணன் மணிமண்டபத்தை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

6. மேட்ரிமோனி இணையதளம் மூலம் பண மோசடி - இரண்டு நைஜீரியர்கள் கைது!

திருமண இணையதளத்தில் போலி விளம்பரம் கொடுத்து சென்னை பெண்ணிடம் ரூ.3.45 லட்சம் மோசடி செய்த நைஜீரியர்கள் இரண்டு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

7. பஞ்ச்ஷீரை கைப்பற்றியதாக தாலிபான்கள் அறிவிப்பு- முடிவுக்கு வரவுள்ள போர்!

பஞ்ச்ஷீர் மாகாணத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தாலிபான்களை எதிர்த்து தீவிரமாக சண்டையிட்டு வந்த பஞ்ச்ஷீர் மாகாணத்தின் தேசிய எதிர்ப்பு முன்னணி, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

8. TOKYO PARALYMPICS: இந்தியாவுக்கு 19 பதக்கங்கள்; 24ஆவது இடம்!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரை இந்தியா 19 பதக்கங்களுடன் 24ஆவது இடத்தோடு நிறைவு செய்துள்ளது.

9. ’தல’ அஜித்துக்கு ஆசிரியர் தின வாழ்த்து... ‘வேம்புலி’ ஜான் கோக்கனின் உருக்கமான பதிவு!

நடிகர் அஜித்தை தனது ஆசிரியர் எனக் குறிப்பிட்டு நடிகர் ஜான் கோக்கன் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்தது வருகிறது.

10. குட்டி பட்டாஸை தொடர்ந்து ஹிட் அடித்த அஸ்வின் பாடல்

நடிகர் அஸ்வின் நடிப்பில் வெளியான ’அடிபொலி’ பாடலை யூ-டியூப்பில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.