ETV Bharat / city

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @11am - சென்னை

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்

11 மணி செய்திச்சுருக்கம்
11 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 7, 2021, 11:02 AM IST

1. மதுரையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒழிக்கப்படும்!

மதுரை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் அனைத்தும் முழுமையாக ஒழிக்கப்படும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

2. அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி என். சிவகுமார் நியமனம்!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக, குறிஞ்சி என். சிவகுமாரை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

3. கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிப்பு

கோவை காந்திபார்க் சுக்ரவார்பேட்டை பகுதியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியார் உணவகம் இடிக்கப்பட்டது.

4. மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

ஆனி மாத கார்த்திகையை முன்னிட்டு மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

5. சந்தைக்குள் காய்கறி வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு: வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு காய்கறி சந்தைக்குள் வாகனங்களை அனுமதிக்காத குத்தகைகாரர்களை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

6. ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் திருட்டு - ஒருவர் கைது!

ஏடிஎம் மையங்களில் தவறவிடும் ஒய்ஃபை கார்டுகள் மூலம் தொடர்ந்து பணம் திருடிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

7. 43 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

நாட்டில் புதிதாக 43 ஆயிரத்து 733 பேருக்கு கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

8. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி கொலை!

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஹல்வாய் என்ற உபேத் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் உயிரிழந்தார்.

9. முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை!

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும், வழக்கறிஞருமான கிட்டி குமாரமங்கலம் (68) நேற்று (ஜூலை 06) கொலை செய்யப்பட்டார்.

10. பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் இன்று(ஜூலை 7) காலை காலமானார். அவருக்கு வயது 98.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.