ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

author img

By

Published : Jul 19, 2020, 11:01 AM IST

top 10 News @ 11am on july 19
top 10 News @ 11am on july 19

திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கரோனா தொற்று உறுதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் கைவிட்ட உறவினர்கள்; உடலை தள்ளுவண்டியில் கொண்டுசென்ற அவலம்!

கரோனா அச்சம் காரணமாக இறந்தவர் உடலைத் தகனம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வராததால், உடலைத் தள்ளுவண்டியில் வைத்து தகனம் செய்யும் இடம் வரை எடுத்துச் சென்ற சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

பொது இடங்களில் இதை செய்யாதீர்கள் - கரோனா மட்டும் ஆபத்து அல்ல!

கன்னியாகுமரி: உலகமே கரோனா அச்சத்தில் முடங்கி கிடக்கும் வேளையில், இந்த பொதுமுடக்க காலத்தில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்ப்போம் என கன்னியாகுமரி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

’கரோனா நோயாளிகளுக்குச் சத்தான உணவு வழங்க போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’

கன்னியாகுமரி: கரோனா நோயாளிகளுக்குச் சத்தான உணவுகள் வழங்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுமார் ரூ.1 லட்சம் பணம்... ரூ.4 லட்சம் கேமரா - தயாரிப்பாளர் அலுவலகத்தில் கொள்ளை!

சென்னை: சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்திலிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம், கேமரா, சாமி சிலை ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் வரவர ராவ்: நரம்பியல் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனைக்கு மாற்றம்!

மும்பை: நரம்பியல் சிகிச்சைக்காக கவிஞர் வரவர ராவ் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையிலிருந்து இன்று அதிகாலை நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மீண்டும் தலையெடுக்கும் கரோனா; 'கிளஸ்டர் கேர்' முறையைக் கையாளவிருக்கும் கேரளா!

திருவனந்தபுரம்: குறிப்பிட்ட ஒரு பகுதியில் திடீரென்று அதிக பேருக்கு தொற்று ஏற்பட்டால் கரோனா கிளஸ்டர் என்றழைக்கப்படும். இந்தக் கிளஸ்டர் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 'கிளஸ்டர் கேர்' முறையை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் லகான் திரைப்படத்தை கண்டுகளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...!

ஜெய்ப்பூர்: பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே அமீர்கான் நடிப்பில் வெளியான லகான் திரைப்படத்தை ஜெய்ப்பூரில் உள்ள ஃபேர்மாண்ட் ஹோட்டலில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் கண்டு களித்தனர்.

ஆளுநரைச் சந்திக்கணுமா... அப்போ கரோனா டெஸ்ட் ரிசல்ட்டோட வாங்க!

சிம்லா: ஆளுரைச் சந்திக்க வேண்டும் என்றால் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்த பின்னர் அதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என இமாச்சலப் பிரதேச ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இமான் வரிசையில் இசையமைப்பாளர் சைமன் கே.கிங் - 24 கிலோ உடல் எடையைக் குறைத்து அசத்தல்...!

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, வேலை இல்லாமல் நினைத்ததை சாப்பிட்டுவிட்டு பலரும் உடல் எடை கூடியதை கவலையுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், இசையமைப்பாளர் சைமன் கே.கிங் நான்கரை மாதங்களில் 24 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளதை திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.