ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1 PM - சென்னை

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 29, 2021, 1:15 PM IST

1. வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் கருணாநிதியின் வரும் முன் காப்போம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இன்று தொடங்கி வைத்தார்.

2. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை?

புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள், அரசு ஒப்பந்ததார் உள்ளிட்ட 3 பேர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

3. ஊழல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை

கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற, ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

4. 'காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே எப்பிரச்சினையும் இல்லை'

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

5. ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் இல்லை - சீமான்

ஒரு மாநிலத்துக்குள்ளேயே ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதவர்கள், எப்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

6. பஞ்சாப் வழியில் கேரளம்.. போர்க்கொடி தூக்கும் மூத்தத் தலைவர்கள்... ராகுல் காந்தி அதிரடி!

பஞ்சாப் போன்று கேரள காங்கிரஸூம் உள்கட்சி பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமான மலையாள தேசத்துக்கு புதன்கிழமை (செப்.29) சென்றார்.

7. டெல்லியில் கேப்டன்.. கலகலக்கும் காங்கிரஸ்.. அமித் ஷா, நட்டாவுடன் சந்திப்பு?

டெல்லி செல்லும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா ஆகியோரை புதன்கிழமை (செப்.29) சந்திக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

8. ஏர் இந்தியா ஒப்பந்தப் புள்ளிகள் இன்று திறப்பு

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை ஏலமிடுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை அரசு இன்று திறக்கிறது.

9. வீட்டுக்காவலில் நான் - மெகபூபா முஃப்தி புகார்

புல்வாமா மாவட்டத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்த மெகபூபா முஃப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

10. 'புஷ்பா'வின் 'ஸ்ரீவள்ளி'யான ராஷ்மிகா : வெளியான ஃபர்ஸ்ட் லுக்

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகிவரும் 'புஷ்பா' படத்தில், ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.