ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1 PM - இன்றைய முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 28, 2021, 12:48 PM IST

1. பாட்டாலே பதிலளித்த ஓபிஎஸ்: பேரவையில் சிரிப்பலை

மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது தனது நிலைப்பாட்டை பாட்டுப் பாடி பதிலளித்துள்ளார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

2. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் - அதிமுக, பாஜக வெளிநடப்பு

மத்திய அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார்.

3. நிழலில்லா நாள் - பிற மாவட்டங்களிலும் செப். 1 வரை காணலாம்

தமிழ்நாட்டில் நிழலில்லா நாள்களைப் பிற மாவட்டங்களிலும் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதிவரை அனைவரும் காணலாம் என மதுரை மாவட்ட அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

4. இளைஞரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு

இளைஞரிடம் 10 லட்சம் ரூபாய் மிரட்டிப் பறித்த வழக்கில் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தியை செப்டம்பர் 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. சொன்னபடி வேட்டையைத் தொடங்கிய அமெரிக்கா: ஆப்கனில் திக்... திக்... திக்...!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக தங்கள் நாட்டு வீரர்களின் மரணத்திற்கு விலை கொடுக்க வேண்டும் எனவும், வேட்டையாடுவோம் என்றும் அமெரிக்க அதிபர் கூறியது கவனிக்கத்தக்கது.

6. சரிந்தது தங்கம் விலை

தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 28) சற்று குறைந்தும், வெள்ளியின் விலை அதிகரித்தும் காணப்படுகிறது.

7. கால்பந்தில் ஜொலிக்கும் உதயநிதி மகன் இன்பன்

உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்கள் மூலம் மக்களை கவர்ந்து அரசியலில் இடம் பிடித்துள்ளார். ஆனால் அவரது மகன் கால்பந்து விளையாட்டில் தடம்பதித்து ஜொலிக்க காத்துக்கொண்டிருக்கிறார்.

8. TOKYO PARALYMPICS: இறுதிப்போட்டிக்கு பவினாபென் படேல் முன்னேற்றம்

டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல், சீன வீராங்கனையை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

9. மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் ரொனால்டோ - குஷியில் ரசிகர்கள்

கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

10. பார்த்திபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார்

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகிவரும் இரவின் நிழல் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் திறந்துவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.