ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - Tamilnadu

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 27, 2021, 1:09 PM IST

Updated : Aug 27, 2021, 1:49 PM IST

1. மேகதாது - தமிழ்நாடு அரசு புதிய மனு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை ரத்துசெய்ய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளது.

2. பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியீடு

பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

3. பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

4. அண்ணா பல்கலை. பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை பருவத் தேர்வு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 27) வெளியிட்டுள்ளது.

5. இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்கும் கரோனா

கரோனா தொற்றால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 496 பேர் உயிரிழந்துள்ளனர்.

6. காபூல் குண்டுவெடிப்பு: நான்கு இடங்களில் தாக்குதல் - 60 பேர் உயிரிழப்பு

காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் இதுவரை 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காபூல் நகரில் இரண்டு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

7. இந்தியாவின் கிரேட்டா தன்பெர்க்: பருவநிலை மாற்றம் குறித்து புத்தகம் எழுதிய 10 வயது சிறுவன்!

பத்து வயதிலே பருவநிலை மாற்றம் குறித்து புத்தகம் எழுதியுள்ள சிரிஷ், இரண்டு சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

8. சீறிப்பாய காத்திருக்கும் விக்ரஹா ரோந்துக் கப்பல்

ரோந்துப் படை கப்பல் விக்ரஹாவின் சேவையைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தொடங்கிவைக்கிறார்

9. ஐஎஸ் அமைப்புக்குத் தாலிபானுடன் தொடர்பு உள்ளது - அமருல்லா சாலே

ஐஎஸ் அமைப்புடன் தாலிபானுக்கு ஆழமான தொடர்புள்ளது என ஆப்கன் காபந்து அதிபர் அமருல்லா சாலே தெரிவித்துள்ளார்.

10. மீண்டும் தெலுங்கில் கால்பதிக்கும் விஜய் சேதுபதி - 'மைக்கேல்' பட அப்டேட்

தெலுங்கில் வெளியான 'உப்பென்னா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றொரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.

Last Updated : Aug 27, 2021, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.