ETV Bharat / city

ஒரு மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

author img

By

Published : Aug 24, 2021, 12:58 PM IST

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கத்தைக் காணலாம்.

ஒரு மணி செய்திச்சுருக்கம்
ஒரு மணி செய்திச்சுருக்கம்

1. பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி. ராகவன் விலகல்

தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கே.டி. ராகவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2. கருணாநிதிக்கு நினைவிடம் - ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளார்.

3. ஓபிஎஸ் - ஈபிஎஸ் மனுக்கள் தள்ளுபடி

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதால் நேரில் முன்னிலையாக விலக்குக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்களைத் தள்ளுபடிசெய்த சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 14இல் இருவரும் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.

4. என் தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர் - ஓபிஎஸ்

சென்னை: எனது தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

5. தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?

வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதிமுதல் கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

6. ஆந்திராவில் பள்ளி மாணவர்கள் ஒன்பது பேருக்கு கரோனா

ஆந்திராவில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

7. ஆப்கனிலிருந்து 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்பு

ஆப்கானிஸ்தானிலிருந்து 25 இந்தியர்கள் உள்பட 78 பேருடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது.

8. பாரமுல்லாவில் வீழ்த்தப்பட்ட 2 பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் இருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

9. பாரா ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து

பாரா ஒலிம்பிக் 2020 இன்று (ஆகஸ்ட் 24) தொடங்க உள்ள நிலையில், அப்போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

10. ட்விட்டரில் சூர்யா ராஜ்ஜியம்- குஷியில் ரசிகர்கள்

ட்விட்டரில் ஏழு மில்லியன் ஃபாலோயர்களைக் கடந்து நடிகர் சூர்யா சாதனை படைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.