ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 1 PM - இன்றைய முக்கிய செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 21, 2021, 1:29 PM IST

1. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு...

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அலகுத் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2. அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் - முதலமைச்சர் பக்ரீத் வாழ்த்து

ஈகை திருநாள் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3. கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ரூ.42,690 பறிமுதல்

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.42,690 பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

4. கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. கோவிட் மூன்றாம் அலையை எப்படி சமாளிப்பது?

கோவிட் மூன்றாம் அலையை சமாளிப்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்க்கலாம்.

6. ஆதார் ரேஷன் கார்டு இணைப்புக்கு காலஅவகாசம்!

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

7. மருத்துவருக்கு இரண்டு வகை கரோனா தொற்று

அசாம் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மருத்துவர் ஒருவருக்கு இரண்டு உருமாறிய கரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8. குலுங்கிய வடஇந்தியா- மக்கள் அதிர்ச்சி!

ராஜஸ்தான், மேகாலயா உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

9. நடிகர் அருள்நிதி பிறந்தநாள் - ரசிகர்கள் வாழ்த்து

நடிகர் அருள்நிதியின் பிறந்தநாளான இன்று (ஜூலை 21) ரசிகர்கள், திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

10. ஆபாச நடிகைகளுக்கு சில ஆயிரங்கள் கொடுத்த ராஜ் குந்த்ரா!

ஆபாச படங்கள் தயாரித்து பதிவேற்றிய வழக்கில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய 3 மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆபாச படங்களில் நடித்த பெண்களுக்கு சம்பளமாக சில ஆயிரங்கள் கொடுக்கப்பட்டதும் காவலர்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.