ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1 pm

author img

By

Published : Jul 13, 2021, 1:30 PM IST

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்...

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்

1. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் ஒரு கோடி கரோனா தொற்று தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

2. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா? - அமைச்சர்கள் விளக்கம்

பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

3. நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம்..!

நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. 4 மாநகராட்சிக்கு புதிய ஆணையர்கள் நியமனம்

திருச்சி, ஆவடி உள்ளிட்ட 4 மாநகராட்சிக்கு புதிய ஆணையர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

5. மனு கொடுக்க வந்தவர்களைக் கைது செய்த காவல் துறை: காத்திருப்புப் போராட்டத்தில் இறங்கிய செவிலிய உதவியாளர்கள்!

படித்துவிட்டு பத்தாண்டுகளாக பணி கிடைக்காமல் இருக்கும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மனு அளிக்க வந்த செவிலிய உதவியாளர்களை காவல் துறையினர் கைது செய்ததால் தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

6. சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா: பக்தர்களின்றி கொடியேற்றம்

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

7. மேகதாது அணை- ஸ்டாலினுக்கு கர்நாடக அமைச்சர் பதில்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணைக் கட்டுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜா பொம்மாயி, மேகதாது அணைத் திட்டத்துக்கு மத்திய அரசு சட்டப்படி அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

8. குங்பூ அரசியல்- சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஜாக்கி சான்!

ஹாங்காங் நாட்டை பூர்விகமாக கொண்ட ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான், சீனாவின் ஆளுங்கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய வாய்ப்புகள் உள்ளன. அதை அவரே சூசகமாக வெளிப்படுத்தினார்.

9. முதல் உலக கோப்பை நாயகன் யாஷ்பால் சர்மா காலமானார்!

1978ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் அறிமுகமானவர் யாஷ்பால் சர்மா. அந்தப் போட்டியில் 26 பந்துகளில் 11 ரன்கள் விளாசிய யாஷ்பால் சர்மா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடிக்க காரணமாக இருந்தார்.

10. நான் யாருன்னு எல்லோருக்கும் நிரூபிக்கிற நேரம் இது - 'சார்பட்டா' ஆர்யாவின் பஞ்ச்

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.