ETV Bharat / city

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

1 PM
1 PM
author img

By

Published : Apr 16, 2021, 1:38 PM IST

1. நடிகர் விவேக்கிற்கு நெஞ்சுவலி: ஐசியுவில் தீவிர சிகிச்சை

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், இன்று அவருக்கு இன்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

2. கிரிஜா வைத்தியநாதன் வழக்கு ஏப். 19-க்கு ஒத்திவைப்பு

சென்னை: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு ஏப். 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

3. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் வரும் 23ஆம்தேதி வரை நடைபெறும் பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.

4. குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்!

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வார காலம் அவகாசம் இருப்பதால், ஓய்வு எடுப்பதற்காக ஒரு வார கால பயணமாக கொடைக்கானல் புறப்பட்டார்.

5. இந்தியா உள்பட 13 நாடுகளிலிருந்து வெளியேறும் சிட்டி வங்கி!

அமெரிக்காவின் முக்கிய வங்கியான சிட்டி வங்கி, இந்தியா உள்பட 13 நாடுகளிலிருந்து சில்லறை வங்கி செயல்பாட்டு சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

6. மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் பேரில் 2 கோடி வரை சுருட்டிய நபர்கள் கைது

சென்னை: முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பேரில் போலியான வங்கிக்கணக்கு தொடங்கி, சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7. தென் தமிழ்நாடு, மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

8. ’தமிழர்களுக்கும் நேதாஜிக்கும் உள்ள உறவு அசைக்க முடியாதது’ - கௌதம் கார்த்திக் பட இயக்குநர்

சென்னை: கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகவுள்ள 'செல்லப்பிள்ளை' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

9. ’சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ - பீலா ராஜேஷ்

கிருஷ்ணகிரி: மாவட்ட சோதனைச் சாவடியில் தீவீர கண்காணிப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும் அரசு முதன்மை செயலருமான பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

10. மீனவர்கள் தடைக்கால நிவாரண நிதியை ரூ.10,000 ஆக உயர்த்த கோரிக்கை!

செங்கல்பட்டு: மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்ததால் மீனவர்கள் தடைக்கால நிவாரண நிதியாக ஐந்தாயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தித் தர கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.