ETV Bharat / city

1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - 1 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம் இதோ...

1 PM
1 PM
author img

By

Published : Apr 1, 2021, 1:08 PM IST

1. 'தன்னிகரற்ற கலைஞன் சூப்பர் ஸ்டார்' - ரஜினிக்கு ஸ்டாலின் வாழ்த்து

நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினியின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள் என திமுக தலைவர் ஸ்டாலின் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

2. 'கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இது' - ரஜினியை வாழ்த்திய முதலமைச்சர்

தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்துக்கு தொலைபேசி மூலம் தான் வாழ்த்து தெரிவித்ததாக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

3. இது வாழ்த்து தானா? - கமல் பதிவால் கடுப்பான ரஜினி ரசிகர்கள்

தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு ஏதோ உள்பொருளோடு கமல் ஹாசன் வாழ்த்துத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

4. இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மை தானடா!

உலகத்திலேயே 70 வயதிலும் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் ஒரே நடிகர் ரஜினிதான். படையப்பா படத்தில் அப்பாஸ் சொல்வதுபோல, அவருக்கு இன்னும் வயசே ஆகல.

5. ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்துள்ளது.

6. ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது தேர்தலுக்காகவா? - பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.

7. 'பாஜகவுக்குச் செலுத்தும் வாக்கு 100 ஆண்டு சரித்திரத்தை மறந்துவிட்டுப் போடுகின்ற வாக்கு!'

பாஜகவிற்குச் செலுத்தும் வாக்கு என்பது 100 ஆண்டுகள் சரித்திரத்தை நாம் மறந்துவிட்டுப் போடுகின்ற வாக்காகத்தான் இருக்கும் என மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

8. 'கருணாநிதி குடும்பம் என்ன ராஜ பரம்பரையா?'

திமுகவைச் சேர்ந்த கருணாநிதி குடும்பத்தினர் என்ன ராஜ பரம்பரையினரா? கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அதன் பிறகு அவரது மகன் இன்பநிதி என வாரிசு அரசியலில் ஈடுபடுகின்றனர். இந்தத் தேர்தல் வம்சாவளி அரசியலுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் தேர்தலாக இருக்க வேண்டும் எனத் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

9. கரோனா தடுப்பூசி குறித்து மதத் தலைவர்களுடன் கலந்துரையாடிய கமலா ஹாரிஸ்!

வாஷிங்டன்: வெறுக்கத்தக்க குற்றம், குடியேற்றம், கோவிட்-19 தடுப்பூசி உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து மதத் தலைவர்களுடன், அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துரையாடினார்.

10. ’இது அரசா, சர்க்கஸா...’ - வட்டிவிகித அறிவிப்பு வாபஸ் குறித்து ரந்தீப் சிங் சுர்ஜிவாலா

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாகக் குறைக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.