ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 PM - TOP 10 NEWS 7 PM

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்

TOP 10 NEWS 7 PM  ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திகள்...

author img

By

Published : Jan 22, 2021, 7:44 PM IST

யானை மீது எரியும் டயரை வீசும் நபர்கள் - பதைபதைக்க வைக்கும் காணொலி

மசினக்குடியில் காதில் தீக்காயம் பட்டு ஜன.20ஆம் தேதி யானை ஒன்று உயிரிழந்தது. இந்நிலையில், டயர் ஒன்றில் தீ வைத்து யானை மீது வீசும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஏழை மக்களுக்கு இலவச நோய் கண்டறியும் ஆய்வகம்!

வசதி வாய்ப்பில்லாத மக்கள், நோய் கண்டறியும் சோதனைகளை இலவசமாக மேற்கொள்ள சிறிய சோதனை மையங்களை தெலங்கானா அரசு நிறுவியுள்ளது.

சேலத்தில் பாஜக இளைஞரணி மாநாடு: ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பிப் 6 ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள பாஜக இளைஞரணி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நில விவகாரம் - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி கோவில் நிலங்கள், கோவிலின் தேவை மற்றும் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். என்னதான் குத்தகை மூலம் கோவிலுக்கு வருமானம் கிடைத்தாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டுவிட்டால் அது நிரந்தரமாகிவிடும்.

சென்னை தனியார் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கரோனா உறுதி

தனியார் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 3 ஆசிரியர்களுக்கு கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத் துறையில் 24 பேருக்கு பணி நியமனம்!

மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியாற்ற 24 பேருக்கு பணி நியமன உத்தரவை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம் - சத்யபிரதா சாகு

விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம். விருப்பமில்லாதவர்கள் வாக்குச்சாவடிக்கே வந்து வாக்கு செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பல் தலைவன் சென்னையில் கைது!

இலங்கை நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பல் தலைவன் மற்றும் அவனது கூட்டாளியை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பட்டியலினத்தைச் சேர்ந்த ஆசிரியரை வலுக்கட்டாயமாக காலில் விழவைத்த கும்பல்!

உளுந்தூர்பேட்டை அருகே பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரை பொது இடத்தில் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடலில் கிடக்கும் முகக்கவசங்கள்: அகற்றும் நீச்சல் வீரர்!

முறையாக அப்புறப்படுத்தாத காரணத்தினால் கடலின் ஆழ பகுதியில் கிடக்கும் பயனற்ற முகக்கவசங்களை ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.