ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திகள் Top 10 news @ 7 pm - TOP 10 NEWS 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திகள் Top 10 news @ 7 pm
TOP 10 NEWS 7 PM
author img

By

Published : Jan 2, 2021, 7:05 PM IST

1.பாரத் பயோடெக்கின் 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அவசர கால அனுமதிக்கு பரிந்துரை

டெல்லி: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் குழு பரிந்துரைத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

2.நான் தயார், ஸ்டாலின் தயாரா? - வேலுமணி பதிலடி

கோயம்புத்தூர்: என் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு செல்வதற்கு நான் இப்பொழுதே தயாராக இருக்கிறேன். நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் பதவி விலகத் தயாரா? நான் ஆண்மையுடன் சவால்விடுகிறேன். ஸ்டாலினுக்கு ஆண்மை இருந்தால் என் சவாலை ஏற்கட்டும் என அமைச்சர் வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

3.ராமநாதபுரம் செழிப்பான மாவட்டமாக மாறும் - முதலமைச்சர் பேச்சு

ராமநாதபுரம் மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

4.புதியோர் நியமனத்தால் காங்கிரசுக்கு எந்தப் பயனுமில்லை - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

தமிழ்நாடு தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகக் குழுவால் எந்தப் பயனுமில்லை. 32 துணைத் தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது.

5.சென்னை நந்தனத்திலிருந்து பசும்பொன் வரை தேசிய தெய்வீக யாத்திரை - கருணாஸ்

ராமநாதபுரம்: சென்னை நந்தனத்திலிருந்து பசும்பொன் வரை தேசிய செய்வீக யாத்திரை நடத்த இருப்பதாக திருவாடனை எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்தார்.

6.'தமிழ்நாட்டை ஆளக்கூடிய திறமை ஸ்டாலினுக்கு இல்லை' - அமைச்சர் கே.பி அன்பழகன் பேச்சு!

தர்மபுரி: ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டை ஆளக்கூடிய திறமை இல்லை என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்தார்.

7.கரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறும் நட்சத்திர விடுதிகள்

சென்னை: தலைநகர் சென்னையில் இயங்கிவரும் பல நடத்திர விடுதிகள் கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் இடர் ஏற்பட்டுள்ளது.

8.மாணவர்களுக்கு காலணிகள் கொள்முதல் டெண்டர்: தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9.அஜித் ரசிகர்களுக்குப் புத்தாண்டின் நற்செய்தி

டெல்லி: 2020ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு புத்தாண்டின் நற்செய்தியாக அமைந்துள்ளது.

10.ஈஷா யோகா மையத்தில் சப்தரிஷி ஆரத்தி

கோவை: அகஸ்திய ஜெயந்தியை முன்னிட்டு, காசியைச் சேர்ந்த ஏழு புரோகிதர்கள் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்னிலையில் சப்தரிஷி ஆரத்தியை நடத்துகிறார்கள். அதன் நேரடி ஒளிபரப்பு...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.