ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS 3 PM - பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 30, 2021, 3:04 PM IST

1. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தத்தைப் பதிவுசெய்ய ரூ. 26.80 கோடியில் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்த உத்தரவை, ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2. பள்ளி-கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு?

பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்கலாமா என அரசு உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மாணக்கரின் உடல் நலனைக் கருத்தில்கொண்டு பள்ளி-கல்லூரிகள் திறப்பு என்பதை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

3. சுமார் ஒன்பது லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை

தமிழ்நாட்டுக்கு மேலும் ஒன்பது லட்சத்து ஒன்பதாயிரத்து 470 கோவீஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்துள்ள நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. பொறியியல் படிப்பில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.

5. சாதிய ரீதியாக ஒன்றுபட்டிருக்கிறார்கள்- ஐஐடியின் போலித்தனத்தை வெளிப்படுத்தும் விபின்

பல்வேறு சீர்திருத்தங்கள் இங்கு செய்யப்பட வேண்டும் என்றால் குறைந்தப்பட்ச அரசியலமைப்பு சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். உள்ளே இருக்கும் பெரும்பாலானவர்கள், மொழி, பாலினம், அரசியல் கொள்கை கடந்து சாதியால் ஒன்றுபட்டிருக்கிறார்கள் - ஐஐடி பேராசிரியர் விபின்

6. உணவுக் கழிவிலிருந்து மின்சாரம்: பிரதமர் மோடியின் பாராட்டு மழையில் சிவகங்கை ’காஞ்சிரங்கால்’ கிராம மக்கள்!

உணவு கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் ஊராட்சியை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

7. உத்தரகாண்ட் நிலச்சரிவு: புதையுண்ட 5 பேர், இருவர் பலி!

உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டத்தில் இன்று (ஆக.30) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில், மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

8. உத்வேகத்தை அளிப்பவரே நீங்கள்தான் - ஜஜாரியாவை புகழும் நீரஜ்

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றுள்ள தேவேந்திர ஜஜாரியாதான், ஈட்டி எறிதல் வீரர்களாகிய எங்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளிப்பவர் என்று ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

9. உலகின் உச்சியில் இருக்கிறேன் - உச்ச மகிழ்வில் தங்க மங்கை

என்னால் இந்த தருணத்தை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. தற்போது நான் உலகத்தின் உச்சியில் இருப்பதுபோல் உள்ளது என பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாரா தெரிவித்துள்ளார்.

10. சிம்பு’னா சும்மாவா.... 300 நாள்களில் 3 மில்லியன் ஃபாலோயர்கள்!

நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய 300 நாள்களில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.