இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கரோனா வைரஸால் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசத்திற்கு அடித்தப்படியாக கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் நேற்று (மே 29) வரை 20 ஆயிரத்து 246 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (மே 30) ஒரே நாளில் 938 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 184 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்சமாக 616 பேரும், செங்கல்பட்டில் 94 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பதிவு செய்யப்பட்ட 160 உயிரிழப்புகளில் 119 பேர் சென்னையில் இறந்துள்ளனர்.
ஆறுதலாக, தமிழ்நாட்டில் இதுவரை 21 ஆயிரத்து 184 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆயிரம் பேர் சிகிச்சைக்குப் பின் குணமாகி தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![today TN corona positive cases count](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-coronaupdates-script-7204624_30052020190526_3005f_1590845726_662.jpeg)
![today TN corona positive cases count](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-coronaupdates-script-7204624_30052020190526_3005f_1590845726_930.jpeg)
இதையும் படிங்க... ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு கரோனா உறுதி!