தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான பட்டயத் தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைப்பெற்றது.
இந்த தேர்விற்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையிலுள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய அக்டோபர் 2019 பட்டயத் தேர்விற்கான, தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tndte.gov.in எனும் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
'ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த Z+ பாதுகாப்பு வாபஸ்' - கனிமொழி கொந்தளிப்பு