சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விமான சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் பயன்பெறுகின்றனர். இந்நிலையில், சென்னையிலிருந்து ஷீரடிக்கு இன்று பிற்பகல் 12.15 மணி மற்றும் 2.05 மணிக்கு புறப்பட்டுச் சென்று, பின்பு மாலை 5.05 மணி மற்றும் 6.35 மணிக்கு சென்னை திரும்பும் நான்கு ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல், சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு மாலை 4.15 மணிக்கு சென்றுவிட்டு, மீண்டும் இரவு 7.25 மணிக்கு சென்னை திரும்பும் இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, பிற்பகல் 2.35 மணிக்கு பெங்களூரிலிருந்தும், இரவு 7 மணிக்கு கொல்கத்தாவிலிருந்தும் சென்னைக்கு வரும் இண்டிகோ விமானங்கள் என மொத்தம் எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மோசமான வானிலை, போதிய பயணிகள் இல்லாததே விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் என்று தனியாா் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் பயணி ரகளை! - கவுன்ட்டர் கண்ணாடி உடைப்பு