ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பணம் கொடுத்து தேர்ச்சி பெற்ற மூவருக்கு ஜாமின் மறுப்பு - TNPSC SCAM Allegation, TNPSC SCAM

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக எழுந்த குற்றஞ்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேரின் ஜாமின் மனுவை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: பணம் கொடுத்து தேர்ச்சி பெற்ற மூன்று பேருக்கு பிணை மறுப்பு TNPSC SCAM Allegation: Bail denied to three persons, including a Govt. servant TNPSC SCAM Allegation, TNPSC SCAM டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு
TNPSC SCAM Allegation: Bail denied to three persons, including a Govt. servant
author img

By

Published : Feb 15, 2020, 2:03 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் தனித்தனியாக வழக்குகள் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த விவகாரத்தில் முறைகேடுக்கு காரணமாக இருந்த இடைத்தரகர் ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன் ஆகியோர் தொடங்கி, நாள்தோறும் சம்மந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையை சிபிசிஐடி காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், குரூப்-2ஏ தேர்வில் 9 லட்சம் கொடுத்து வெற்றிபெற்று வேலூர் மாவட்டத்திலுள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிய திருவண்ணாமலையைச் சேர்ந்த வினோத் குமார், குரூப்-4 தேர்வில் தலா 7 லட்சம் கொடுத்து வெற்றிபெற்ற கடலூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், அவரது உறவினர் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் ஜாமின் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல் துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது எனவும் ஜாமின் வழங்கினால் வழக்கின் விசாரணையைப் பாதிக்கும் எனவும் வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி மூவருக்கும் ஜாமின் வழங்க மறுத்து, அவர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: எழுவர் விடுதலை: ஆளுநரிடம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.