ETV Bharat / city

ஒருங்கிணைந்த நிலவியலாளர் பணிக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நவ. 20, 21 தேதிகளில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த நிலவியலாளர் சார்நிலைப பணிக்கான எழுத்து தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது
ஒருங்கிணைந்த நிலவியலாளர் பணிக்கான நுழைவுச் சீட்டுகள்
author img

By

Published : Nov 12, 2021, 9:02 AM IST

சென்னை: இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த நிலவியலாளர், சார்நிலைப்பணி பதவிக்கு நவ. 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், சென்னை மாவட்டத்தில் மட்டும் தேர்வு நடைபெற உள்ளது.

நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம்

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற பந்து முனைப் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். காலையில் நடைபெறும் தேர்விற்கு 9. 15 மணிக்கு பின்னர் தேர்வுக் கூடத்திற்குள் நுழையவோ, மதியம் 1. 15 மணிக்கு முன்பு தேர்வு கூடத்திலிருந்து வெளியேறவும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கியூ ஆர்க் கோடு வசதி

மேலும், மதியம் நடைபெறும் தேர்விற்கு தேர்வர்கள், மதியம் 2. 15 மணிக்கு பின்னர் தேர்வுக் கூடத்திற்குள் நுழையவோ, மாலை 5.15 மணிக்கு முன்னர் தேர்வுக் கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம்

விண்ணப்பதாரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடம் அமைந்துள்ள இடத்தை எளிதில் தெரிந்துகொள்ள, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் கியூ ஆர் கோடு அச்சிடப்பட்டுள்ளது. இதனை கியூ ஆர் கோட் செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வு மையம் அமைந்துள்ள இடத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு அறைக்குள் செல்போன் மற்றும் வேறு ஏதேனும் மின்னணு உபகரணங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள் தங்களது செல்போன் மற்றும் பிற உடைமைகளை தேர்வு மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும். பாதுகாப்பு அறையில் வைப்பதும் அவர்களின் சொந்த பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.