ETV Bharat / city

தேர்வு மையத்தினை கண்டறிய ஹால் டிக்கெட்டில் கியூஆர் கோடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சென்னை: அரசுப் பணிக்கு தேர்வு எழுதுபவர்கள், தங்கள் மையங்களை எளிமையாகக் கண்டறியும் வகையில், கியூஆர்கோடு பதிந்த ஹால் டிக்கெட்டுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி
author img

By

Published : Sep 8, 2021, 5:14 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகள் பள்ளிகளில் நடத்தப்படுவது வழக்கம்.

இவற்றில் சில பள்ளியை எளிதில் கண்டறிந்துவிடலாம். ஆனால் தேர்வு நாளன்று சில பள்ளிகளைக் கண்டறிந்து தேர்வு மையங்களை சென்றடைவது மிகவும் சிரமமாக இருக்கும். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் தேர்வர்கள் இப்பள்ளிகள் அமைந்துள்ள இடங்களை கண்டறிவதற்கு வெகுவாக சிரமப்படுவர்.

ஹால் டிக்கெட்டில் கியூ ஆர் கோடு

இந்நிலையில், இந்த சிரமத்தினைப் போக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முதன்முறையாக ஹால் டிக்கெட்டுகளில் கியூ ஆர் கோடு பதிந்து வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு, வரும் செப்டம்பர் 18ஆம் தேதி காலை, மாலை வேளைகளில் ஏழு மாவட்டத் தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வு மைய நுழைவுச் சீட்டுகள், தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (one time registration) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவுரைகளை கவனமாக குறித்துக் கொள்ளவும், தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.

எந்த ஒரு தேர்வரும் முற்பகலில் நடைபெறும் தேர்விற்கு காலை 9.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ, மதியம் 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எந்த ஒரு தேர்வரும் மதியம் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். முதன்முறையாக கியூஆர் கோடு விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை எளிதில் தெரிந்துகொள்ளும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில், விரைவுத்தகவல் குறியீடு அச்சிடப்பட்டுள்ளது.

இதனை விரைவுத்தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை Google Maps மூலமாக தெரிந்து கொண்டு பயன் பெறலாம். தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டுசெல்ல அனுமதியில்லை.

எனவே விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி எண் 17 (A) (iv)இல் உள்ள குறிப்பின்படி தங்களது செல்போன் உள்பட பிற உடமைகளை செய்து தேர்வு மையத்திலுள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும். இருப்பினும் சொந்த உடமைகளை பாதுகாப்பு அறையில் வைப்பது தேர்வரின் சொந்த பொறுப்பிற்கு உள்பட்டதாகும்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்பிலான பையனூர் பங்களா முடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.