குரூப் - 4 தேர்வு தரவரிசைப் பட்டியலில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில், முதல் 100 இடங்களில் 35 பேர் இடம் பெற்றிருந்தனர். இதனால் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாக பெரும்பாலானோர் புகார் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில், ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விசாரணைக்கு இன்று நேரில் வருமாறு அழைத்திருந்தது.
அதன்படி, முதல் 100 பேரில் 35 இடங்களைப் பெற்ற அனைவரிடமும், அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அவர்களிடம், ராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு மையமாக தேர்ந்தெடுத்தது ஏன்?, முறைகேடுகளில் ஏதேனும் ஈடுபட்டீர்களா ?, எத்தனை ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வருகிறீர்கள்? எனப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதனை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் கணிதம், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை வழங்கி, விடை எழுதித் தரும்படியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாங்கியுள்ளது.
5 இடங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக 2 மணி நேரமும், இறுதியில் தேர்வரின் விவரங்கள் அனைத்தும் வாங்கிக் கொள்ளப்பட்டு, விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்படும்போது வரவேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: குரூப் - 4 தேர்வு முறைகேடு - டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்