ETV Bharat / city

ஆதார் விவரங்களை இணைக்க டிஎன்பிஎஸ்சி அறிவுரை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்ள பதிவுசெய்தவர்கள் தங்களின் ஆதார் விவரங்களை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் நிரந்தரப் பதிவில் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
author img

By

Published : Feb 2, 2022, 1:15 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்பத் தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்திவருகிறது.

மேலும், தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டும், போட்டித் தேர்வுகளை விரைவாக நிறைவுசெய்யும் வகையிலும் அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்திவருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration - OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்துத் தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தவறாமல் இணைத்து எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், இது குறித்து விவரங்களை 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in / grievance tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை தொடர்புகொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.