சென்னை:TNGTF thanks to CM: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியுள்ளதாவது,
'கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
இரண்டு ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு வழங்காத நிலையில், புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர்களுடன் தமிழ்நாடு அரசின் நிதித்துறைச் செயலாளர் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டது.
அகவிலைப்படி உயர்வு தீர்மானம்
மேலும் ஜூலை மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திலும் அக்டோபர் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்திலும் மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் இயற்றப்பட்டது.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபடி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கி அறிவித்துள்ளார்.
16 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் உத்தரவு பிறப்பித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:Coimbatore Police Transferred: சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய காவலர்கள் பணியிட மாற்றம்