ETV Bharat / city

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்! - கேங்மேன் பணி

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஏராளமானோர், இரண்டு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

tneb
author img

By

Published : Aug 25, 2019, 1:16 PM IST

தமிழ்நாடு முழுவதும் மின் வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கஜா, வர்தா உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படும்.

இருப்பினும், இவர்களுக்கு சொற்ப சம்பளமே வழங்கப்படுவதுடன் பணி நிரந்தரம் செய்யாமல் ஆயிரகணக்கான ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், மின் விபத்துகளில் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு எந்தவொரு காப்பீடும் தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படுவதில்லை.

tneb contract labours protest  chennai
மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்க தலைவர்

இந்நிலையில், கேங்மேன் என்கிற பணியிடத்தை உருவாக்கி அதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிரப்பப்பட உள்ளனர். எனவே பணி நிரந்தரம் வழங்கக்கோரியும், கேங்மேன் பணியில் வெளி மாநிலத்தவர்கள் நிரப்பப்படுவதை கண்டித்தும் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சென்னை அண்ணா சாலை தலைமை மின் வாரிய அலுவலகம் எதிரே இரண்டு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டம்

மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:

Body:tn_che_02_protest_of_tneb_contract_labourers_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.