தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 91 ஆயிரம் இடங்களுக்கு துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொதுக் கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 12ஆம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி படித்த தகுதி வாய்ந்த மாணவர்களும் மற்றும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணைக் கலந்தாய்வில் கலந்து கொண்டு இணையம் மூலம் பதிவு செய்யலாம்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய, 52 பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும். மாணவர்கள் விண்ணப்பங்களை ’https://www.tneaonline.org/’ வாயிலாக இன்று முதல் 7ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். இதற்காக 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குரூப் -4 தட்டச்சர் பணி நியமன ஆணை!