சென்னை வானிலை ஆய்வு மையம் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இரவு ஒரு மணி முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று (ஜன. 04) இரவு முதல் மழை பெய்துவருகிறது. தாம்பரம், முடிச்சூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது பணிகளுக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “1915ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது, கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு ஜனவரியில் சென்னையில் கனமழை பெய்துள்ளது. இதில் தரமணியில் 170 மி.மீ. மழை பதிவாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...சென்னை, புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை - மக்கள் அவதி