அம்பத்தூரில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற திமுகவேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதிலிருந்து சில துளிகள்:
- தமிழ்நாட்டின் உரிமை நீட், காவிரி போன்ற அத்தியாவசிய தேவைகள் பறிபோனது.
- வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொல்லி ஏமாற்றினார் மோடி.
- நாடு இதுவரை கண்டிராத சர்வதிகார, மதவாதகுணங்கொண்ட பிரதமர் மோடியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
- நாட்டில் ஒரு அரசியல் கட்சியை பணத்திற்காக விலைபேசி விற்கப்பட்ட கட்சி பாமக மட்டுமாகதான் இருக்கமுடியும்.
- அதிமுக கூட்டணி கொள்கையில்லாத துரோகக் கூட்டணி.
- 18 தொகுதிகளில் திமுகவெற்றி பெற்றால் தமிழர்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி ஆட்சி தூக்கி எறியப்படும்.
- ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் வரை மோடியின் அரசு இருக்கும். மோடி அரசுக்கு அதுவே கடைசி நாள்.